» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கருப்பு கொடியுடன் பொதுமக்கள் போராட்டம் : தூத்துக்குடி அருகே பரபரப்பு
புதன் 10, செப்டம்பர் 2025 12:19:37 PM (IST)

தூத்துக்குடி அருகே மறவன்மடம் கிராமத்தில் கருப்பு கொடியுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் மறவன்மடம் கிராமத்தில் சாலை அமைக்க வலியுறத்தி கருப்பு கொடியுடன் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "மறவன்மடம் ஊராட்சியில் உள்ள வருமானவரி நகரில் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் வசிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் மனு கொடுத்தும் வந்தோம்.
இதுவரை எங்களுக்கு சாலை வசதி அமைத்து கொடுக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் மணல் பாங்கானதால் வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. 2023 டிசம்பர் வெள்ளத்திற்கு பிறகு சாலைகளில் மணல் திட்டுகளினால் சாலைகள் உபயோகமற்ற முறையில் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் மிதிவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தார்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியல் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சுமார் 5 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










