» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதானி அறக்கட்டளை சார்பில் நடமாடும் மருத்துவ பிரிவு துவக்கம்!

புதன் 10, செப்டம்பர் 2025 12:05:59 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் அதானி அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் மருத்துவ பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. 

மோக்சி பவர் ஜெனரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு பணிகளின் சார்பில் நடமாடும் மருத்துவப் பிரிவு துவக்க விழா, மோக்சி பவர் ஜெனரேஷன் தொழிற்சாலையில் நடைபெற்றது. இத்திட்டத்தினை தலைமை வணிக அதிகாரி பரமேஸ்வரன், செயல்பாடு மற்றும் பராமரிப்புத் துறை தலைவர் முல்லா ரவி, மனிதவள துணைத் தலைவர் மனோகர் எத்திராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். 

இத்திட்டமானது 36.5 லட்சம் மதிப்பில் தருவைக்குளம், பட்டினமருதூர், மேல அரசரடி ஆகிய பஞ்சாயத்துகள் உட்பட சுற்றுவட்டார பகுதியாகிய 20 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்த நடமாடும் மருத்துவமனைப் பிரிவில் மக்களுக்கு இலவச சிகிச்சையும், மருந்துகளும் அளிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது மோக்சி பவர் ஜெனரேஷன் லிமிடெட் மற்றும் அதானி பவுண்டேஷன் இணைந்து ஏற்படுத்திய திட்டமாகும்.


மக்கள் கருத்து

தமிழன்Sep 13, 2025 - 02:51:53 PM | Posted IP 172.7*****

வடை நாட்டுக்காரனுக்கு இங்கு என்ன வேலை ?

AntonySep 12, 2025 - 10:04:58 AM | Posted IP 172.7*****

Dani - Avan inga Coastal Energen Power Plant eduthu romba naal achu

DaniSep 11, 2025 - 09:14:52 AM | Posted IP 104.2*****

Yow adaani yennaya indha pakkam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory