» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் : தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதன் 10, செப்டம்பர் 2025 11:56:01 AM (IST)



தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வலியுறுத்தியும், வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பல இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி, சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே, மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மேலும், புதிதாக துவங்கப்பட்டுள்ள கார் தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் சென்னையில் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

LingamSep 12, 2025 - 12:08:10 PM | Posted IP 162.1*****

Sterlite vandam

BalaSep 11, 2025 - 10:33:47 PM | Posted IP 172.7*****

வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் இவனுங்களுக்கு சம்பந்தம் இல்லயாம். இது போலி டுபாக்கூர் கூட்டம்..

lawyerSep 11, 2025 - 10:21:10 AM | Posted IP 172.7*****

enna sterlite kodukkum pannam pothavillaiya? lawyers

M BabuSep 11, 2025 - 08:24:33 AM | Posted IP 172.7*****

ipo irukura yella factories la ullur aatkal than work panrangala noorth indian than yella idathulayum worrk panran,,athe mathiri itha open panalum avanuga tha work pana poranuga apuram yenna?

அன்புSep 10, 2025 - 02:38:29 PM | Posted IP 172.7*****

டுபாக்கூர் வழக்கறிஞர்களுக்கு வேலை ஏதும் இல்ல போல அதான் வேதாந்தா கிட்ட ஐயா பிச்சை போடுங்க அப்படின்னு பிச்சை எடுக்க வந்துட்டாங்க ஸ்டெர்லைட் அரசின் கொள்கை முடிவு 13 உயிர்கள் இதற்கு டுபாக்கூர் வக்கீல்கள் நியாயம் கேட்க கூடாது வேணும் என்றால் ஸ்டெர்லைட் இடங்களை அரசிடம் கேட்டு விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் அடுத்தவர்கள் உடைய குடிகளை கெடுக்க வேண்டாம்

வழக்கறிஞரில் ஒருவன்Sep 10, 2025 - 12:38:09 PM | Posted IP 162.1*****

பணம் பத்தும் செய்யும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory