» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருத்தரங்கம் : ஆட்சியர் க. இளம்பகவத் தகவல்
புதன் 10, செப்டம்பர் 2025 11:11:27 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 16.09.2025 மற்றும் 17.09.2025 ஆகிய இரு நாள்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 16.09.2025, 17.09.2025 ஆகிய இரண்டு நாள்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை நடைபெறுகிறது. 17.09.2025 பிற்பகல் 03.00 மணி முதல் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
16.09.2025 முற்பகல் மாவட்ட வருவாய் அலுவலரின் பயிலரங்கத் தொடக்க உரையைத் தொடர்ந்து பயிலரங்கில் 1.ஆட்சிமொழி வரலாற்றுச் சட்டம் 2.ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள் 3. மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம் 4.அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் 5.மொழிப்பயிற்சி 6.ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும் ஆகிய ஆறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
17.09.2025 பிற்பகல் நடைபெறும் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமை உரையாற்ற உள்ளார். ஆட்சிமொழிக் கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் கருத்துரை வழங்க உள்ளனர்.
அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் வ. சுந்தர் செயல்படுவார் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










