» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளங்கள் சீரமைக்கும் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

புதன் 10, செப்டம்பர் 2025 10:26:40 AM (IST)



துத்துக்குடி மாவட்டத்தில் சீனிமாவடிகுளம், அம்மன்புரம்குளம் மற்றும் கடம்பாகுளம் ஆகிய குளங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது : வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறானது மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிலப்பரப்புகள் வழியாக சுமார் 131 கி.மீ. தூரம் ஓடி தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் கிராமத்தில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றுப் பாசன அமைப்பில் 8 அணைக்கட்டுகளும், 11 பிரதான கால்வாய்களும். 186 பாசன குளங்களும் அமைந்துள்ளன. தாமிரபரணி பாசன அமைப்பு மூலம் மொத்தம் 86107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இந்தப் பாசன அமைப்பின் கடைசி 2 அணைக்கட்டுகளும், 4 பிரதான கால்வாய்களும், 53 குளங்களும் அமைந்துள்ளன. இவற்றின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 46107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பாசன அமைப்பில் உள்ள 8-வது அணைக்கட்டான திருவைகுண்டம் அணைக்கட்டின் வலது புறமிருந்து தெற்கு பிரதான கால்வாய் பிரிந்து செல்கிறது. இக்கால்வாயின் கீழ் 15 பாசன குளங்கள் உள்ளன. அவற்றில் சீனிமாவடிகுளம், அம்மன்புரம்குளம் உள்ளிட்டவை ஆகும். 

சீனிமாவடிகுளத்தின் மூலம் பயனடையும் பாசன பரப்பு 1276.67 ஏக்கர் ஆகும். இதன் கொள்ளளவு 13.70 மி.க.அடி ஆகும். திருச்செந்தூர் - சீனிமாவடிகுளம் தெற்கு வாய்க்கால் கரைகள் ரூ.190.00 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. சீனிமாவடிகுளத்தில் நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டப்பணிகள் மூலம் 5 மடைகள் மறுகட்டுமானமும், வெள்ள பாதுகாப்பு சுவர் அமைத்தல் மற்றும் கால் சுவர் 490 மீட்டர் அமைத்தல், கரைப்பலப்படுத்தும் பணிகளும் முடிவுற்றன. மேலும், 490 மீட்டருக்கு கான்கிரீட் கற்காரைகள் கொண்டு கரையினை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, அம்மன்புரம்குளத்தின் மூலம் பயனடையும் பாசன பரப்பு 781.90 ஏக்கர் ஆகும். இதன் கொள்ளளவு 42.74 மி.க.அடி ஆகும். குரும்பூர்-அம்மன்புரம்குளத்தின் தெற்கு வாய்க்கால் கரைகள் ரூ.195.00 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. அம்மன்புரம்குளத்தில் நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டப்பணிகள் மூலம் மடைகள் மறுகட்டுமானமும், வெள்ளப்பாதுகாப்பு சுவர் அமைத்தல் மற்றும் கால் சுவர் 210 மீட்டர் அமைத்தல், கரைப்பலப்படுத்தும் பணிகளும் முடிவுற்றன. 

மேலும், 210 மீட்டருக்கு கான்கிரீட் கற்காரைகள் கொண்டு கரையினை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடம்பாகுளம் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், இதன்மூலம் பயனடையும் பாசன பரப்பு 22171 ஏக்கர் பரப்பு ஆகும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) தங்கராஜ், வட்டாட்சியர்கள் பாலசுந்தரம் (திருச்செந்தூர்), செல்வகுமார் (ஏரல்), உதவி பொறியாளர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory