» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வைப்பார் தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா : மும்மதத்தினர் வழிபாடு
புதன் 10, செப்டம்பர் 2025 8:09:30 AM (IST)

வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகிய மும்மதத்தினர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாரில் புகழ்பெற்ற மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்காவில் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று அதிகாலையில் நடந்தது.
இதையொட்டி பள்ளிவாசலில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. வானவேடிக்கையுடன், தப்புதாளங்கள் முழங்க சிலம்பாட்டம் போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் வைப்பாரிலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. வழிநெடுகிலும் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் குவிந்திருந்து வழிபாடு நடத்தினர்.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவை சென்றடைந்தது. அங்கு ரவுலா ஷரிபுக்கு சந்தனம் பூசப்பட்டது. முன்னதாக, இந்த சந்தனம் அங்குள்ள சிவன் கோவிலில் அரைத்து எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து மும்மதத்தை சேர்ந்த பக்தர்களுக்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் தர்ஹா முன்பு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் மும்மதத்தினரும் பங்கேற்று அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் விபூதி பிரசாதமும் வழங்கப்பட்டது. தமிழகத்தில் இந்த தர்காவில் மட்டுமே விபூதி பிரசாதம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மும்மதத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










