» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நண்பர் வீட்டிற்கு சென்ற யூடியூபர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை!
புதன் 10, செப்டம்பர் 2025 7:56:53 AM (IST)
தூத்துக்குடியில் நண்பர் வீட்டிற்கு சென்ற யூடியூபர் மாயமான சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த மாசானமுத்து மகன் முருகன் (56). இவருக்கு மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் சென்னை தாம்பரம் இரும்புலியூரில் அரிசி கடை வைத்திருப்பதோடு, ஆன்மிகம் சம்பந்தமான யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
முருகன், தூத்துக்குடியில் உள்ள தம்பி சரவணன் வீட்டிற்கு சென்றார். கடந்த ஆக.18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர், ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணா புரத்தில் உள்ள தனது நண்பர் அசோக் வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆக. 29ஆம் தேதி தனது நண்பர் அசோக்கிடம் தூத்துக்குடி செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற அவர் கடந்த 9 நாள்களாக தேடிப் பார்த்தும் காணவில்லை என முருகனின் தம்பி சரவணன் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










