» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பு திருப்பலி
புதன் 10, செப்டம்பர் 2025 7:50:20 AM (IST)

தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஜெபமாலை, சிறப்புத் திருப்பலி, அன்னையின் திருவுருவ சப்பர பவனி, அசன விருந்து ஆகியன நடைபெற்றன.
நிறைவு நாளன்று கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பிராங்க்ளின் பர்ணாந்த் தலைமையில், புனித அகுஸ்தினார் சபை சந்தியா விசுவாசம், லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ ஆகியோர் கலந்துகொண்டு ஆடம்பர திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை தங்கத்தேர் கெபி கமிட்டி, புனித வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள், புனித பூண்டிமாதா அன்பிய மக்கள் இணைந்து செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










