» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3பேர் கைது : சரக்கு வாகனம், பைக் பறிமுதல்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:57:58 PM (IST)

விளாத்திகுளம் அருகே ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் நாகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சரக்கு வாகனத்திற்கு முன்பு ஒரு இருசக்கர வாகனமும் பின்பு ஒரு இருசக்கர வாகனமும் வந்தது அறிந்த சங்கரலிங்கபுரம் போலீசார் சந்தேகம் அடைந்து வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த முயன்ற போது, அந்த வாகனத்தில் மூன்று நபர்கள் காவல்துறையினரிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறு செய்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த சரக்கு வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் அதில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 130 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட என்.வேடபட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் கார்த்திக்குமார் (33), தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேஷ் (25), ஆற்றங்கரை தானியேல் நகர் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் அன்புதாசன்(25) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே கார்த்திக் மீது மாசார்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு வழக்கும், வெங்கடேஷ் மீது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










