» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேசன் கடைகளில் இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டும் : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:54:30 PM (IST)

இணையதள வேக குறைவால் பாதிக்கப்படும் ரேசன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள POS கருவிக்கான இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமிழகமுதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழகம் முழுவதும் 37,328 ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் POS (Point of Sale) மின்னனு கருவி மூலம் பொருட்கள் விநியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகின்றது. கடை ஊழியர்கள் எடை இயந்திரம் மற்றும் POS கருவியை இணைப்பதற்கான இணையதள வேகம் குறைவாக இருப்பதால் கால தாமதம் ஏற்பட்டு ரேசன் வருகின்றனர்.

லெட்சுமணன் என்பவர் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ரேசன் கடையில் அப்பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்ததால் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவ்வாறு ஏற்படும் ஏற்படும் கால தாமதத்தினால் வேலைக்கு செல்பவர்கள் ரேசன் பொருட்களை வாங்குவதற்காகவே ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆகவே இணையதள சேவையை 5ஜி அளவிற்கு உயர்த்தி அதற்கு தகுந்தாற் போன்ற உட்கட்ட அமைப்புகளை POS கருவிகளில் உடனடியாக மாற்றம் செய்து தற்போதைய புதிய நடைமுறையில் உள்ள சிக்கல்களையும், பிரச்சினைகளையும் சரி செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு எளிதாக ரேசன் பொருட்கள் கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory