» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:43:54 PM (IST)
தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டி (எ) மட்டி மகன் முனியசாமி (70/2022) என்பவரை கடந்த 17.06.2022 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் வைத்து குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சின்னத்தம்பி 32/2025) மற்றும் சின்னதம்பியின் நண்பரான கலைஞர்நகர் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் கருப்பசாமி (24/2025) ஆகியோரை வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா இன்று (09.09.2025) குற்றவாளிகளான சின்னத்தம்பி மற்றும் கருப்பசாமி ஆகிய இருவருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சிலம்பரசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 18 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










