» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியுடன் வீடியோ காலில் பேசிய கணவர் தற்கொலை : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 11:02:34 AM (IST)
கோவில்பட்டியில் மனைவியுடன் வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறில், கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எஸ்.எஸ். நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுரேஷ் (35), இவரது மனைவி காயத்ரி துபாயில் வேலை பார்த்து வருகிறார். இன்று அதிகாலை 2 மணி அளவில் சுரேஷ் அவரது மனைவி காயத்ரியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.
அப்போது மனையிடன் சண்டை போட்டுவிட்டு நான் சாகப் போகிறேன் என்று சொல்லிவிட்டு போனை ஆப் செய்து விட்டாராம். கணவர் ஃபோனை கட் செய்ததும் பதறிதுடித்த காயத்ரி தனது உறவினரான வினோத் என்பதற்கு போன் செய்து நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷ் அங்கு சென்று பார்த்தபோது சுரேஷ் பிணமாக தொங்கியது தெரியவந்தது.
இது குறித்து தகவல்அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










