» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி உட்பட 3பேர் கைது!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:55:17 AM (IST)
தூத்துக்குடியில் பைக் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரில் வசிப்பவர் விசுவாசம் மகன் பிரபு (35), இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டு வசிப்பவர் முருகன் மகன் ராமர். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பிரபு தனது இருசக்கர வாகனத்தை ராமர் வீட்டு அருகில் உள்ள தண்ணீர் பிடிக்கும் குழாய் அருகே நிறுத்தி இருந்தாராம் இதைப் பார்த்த ராமர் பிரபுவிடம் என் வீட்டு முன்பு எப்படி பைக்கை நிறுத்தலாம் என்று அவரிடம் தகராறு செய்தாராம். அப்போது அங்கு வந்த ராமரின் நண்பர்கள் 8 பேர் சேர்ந்து பிரபுவை சரமாரியாக தாக்கினார்களாம். இதில் அவரது 3 பற்கள் உடைந்தன. மேலும் தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வடிவேல் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் விசாரணை நடத்தி முத்தையாபுரம் சூசை நகரை சேர்ந்த முருகன் மகன் ராமச்சந்திரன் (27), அவரது தம்பி கார்த்திக் (19) சோலைராஜ் மகன் சுரேஷ்குமார் (38) ஆகிய 3பேரை கைது செய்தனர் மேலும் 5 பேரை தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










