» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் பேருந்து நடத்துனர்கள் மீது நடவடிக்கை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:32:34 AM (IST)
பயணிகளிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வரும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவில்பட்டி செல்லக்கூடிய சில தனியார் பேருந்துகளில் எப்போது வென்றான், குறுக்குச் சாலை, சோழா புரம், புதூர் பாண்டியாபுரம் போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் (பொதுமக்கள்) பஸ் புறப்படும் நேரத்தில் தான் ஏற வேண்டும் என்றும்,
புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்கும்போது எப்போது வென்றான், குறுக்குச் சாலை, சோழா புரம், புதூர் பாண்டியாபுரம் இந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் முன்கூட்டியே ஏறி பேருந்தில் அமர்ந்து இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக கீழ இறங்கச் சொல்லியும், இல்லையெனில் தகாத வார்த்தைகளை பேருந்து நடத்துனர் பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
வயதானவர்கள், நிறைமாத கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என எவரையும் பொருட்படுத்தாது கோவில்பட்டி செல்லக்கூடிய பயணிகள் மட்டும் முன்கூட்டியே பேருந்தில் ஏறி அமர்ந்து செல்ல வேண்டும். இடையில் பிற ஊர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் பேருந்து புறப்படும் நேரத்தில் மட்டுமே ஏற வேண்டும் என்று நடத்துனர் கூறவதாகவும்,
அப்படி தெரியாமல் ஏறிய பயணிகளை வலுக்கட்டாயமாக கீழ இறங்கச் சொல்வதும், ஏன் என்று கேட்டால் அப்படிதான் இந்த பேருந்தில் பயணம் செய் இல்லையென்றால் வேறு பேருந்தில் காத்திருந்து வா, என்று ஒரு ரவுடி போல் பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுபோன்ற நடத்துனர்கள் மீதும், இவர்களை கண்டு கொள்ளாத தனியார் பேருந்து நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










