» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழுகாசலமூர்த்தி மலையில் பவுர்ணமி கிரிவலம் : திரளான பக்தர்கள் வழிபாடு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:18:43 AM (IST)

ஆவணி பவுர்ணமி தினத்தையொட்டி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று முன்தினம் ஆவணி பவுர்ணமியையொட்டி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். பின்னர் சந்திரகிரகணத்திற்காக மதியம் 2 மணி முதல் கோவில் நடை சாத்தப்பட்டது. இரவு வரை கோவில் திறக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று சந்திரகிரகணம் முடிந்த நிலையில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணியளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6 மணியளவில் திரளான பக்தர்கள் கோவில் முன்பிருந்து கிரிவலம் புறப்பட்டனர். இதை கோவில் பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என்ற கோஷத்துடன் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










