» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவையின் உறுதிமொழி குழு ஆய்வு - ஆட்சியர் தகவல்
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:09:35 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 12ஆம் தேதி சட்டமன்றப் பேரவையின் உறுதிமொழி குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி குழு 12.09.2025 அன்று காலை குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் (பண்ருட்டி) தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுத்துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். மேலும் மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் (பண்ருட்டி) தலைமையில், குழு உறுப்பினர்களாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), இரா.அருள் (சேலம் மேற்கு), மு.சக்ரபாணி (வானூர்), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்), கோ.தளபதி (மதுரை வடக்கு), A.நல்லதம்பி (திருப்பத்தூர்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ரா.மணி (ஓமலூர்) , சா.மாங்குடி (காரைக்குடி), M.K.மோகன் (அண்ணா நகர்), S.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










