» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முழு சந்திர கிரகணத்தை பார்த்து வியந்த பொதுமக்கள்!
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:16:29 PM (IST)

நேற்று இரவு நிகழ்ந்த அரிய முழு சந்திரகிரகணத்தை கோவில்பட்டியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும். கிரகணங்கள் நிழல்களின் விளையாட்டு தான். இந்நிகழ்வு மனிதர்கள், விலங்குகள், உணவு பொருட்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.
இந்நிகழ்வினைக் காண கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் டெலஸ்கோப் மூலம் பார்வையிட ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் செல்வ கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன், எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் சசிகலா அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியை கமலா ராணி கலந்து கொண்டு சந்திர கிரகணம் குறித்து கருத்துரை வழங்கினார். இதில் சந்திர கிரகணம் குறித்து பதில் அளித்த மாணவிகளுக்கு வானவியல் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வானில் நடந்த சந்திர கிரகணத்தை டெலஸ்கோப்பிலும் வெறும் கண்களாலும் கண்டு வியந்தனர்.
இதில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் கருத்தாளர் முருகப்பெருமான், ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், மேனாள் வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார், நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரபு, ஆசிரியர்கள் குரு பிரசாத், புளோரி தீபா, மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி சூப்பர்வைசர் பாலமுருகன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










