» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை: ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 8, செப்டம்பர் 2025 11:29:49 AM (IST)

தூத்துக்குடியில் பெருமாள்புரம் மெயின் ரோட்டில், சேதம் அடைந்துள்ள கழிவுநீர் கால்வாயை மழைக்காலம் துவங்கும் முன், சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பெருமாள்புரம் மெயின் ரோட்டில் செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி கால்வாயில் இறங்கியதால், கழிவு கால்வாய் சுவர் சேதம் அடைந்தது. சேதம் அடைந்து 2 ஆண்டுகளாகியும் இதனை சீரமைக்கவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பலமுறை ஹெல்ப்லைன் மூலமாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
இந்த பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குழந்தைகள் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தினமும் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் கழிவு நீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து நிலை ஏற்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் நேரடியாக ஆய்வு செய்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










