» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த 4ஆயிரம் லிட்டர் பயோ டீசல் பறிமுதல் - டிரைவர் கைது!

திங்கள் 8, செப்டம்பர் 2025 10:38:18 AM (IST)



தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 4ஆயிரம் லிட்டர் பயோ டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறி வைத்து கள்ளசந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தனர். அதன்பேரில் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் தென்பாகம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மீன்பிடி துறைமுகம் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. 

அந்த லாரியில் 200 லிட்டர் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அந்த லாரியை சோதனை செய்த போது, அந்த பேரல்களில் டீசல் போன்ற எண்ணெய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதில் இருந்த 4ஆயிரம் லிட்டர் பயோ டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.5லட்சம் என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பாக அந்த லாரியை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், பயோ டீசலை சிவகங்கையில் இருந்து கொண்டு வந்து இங்குள்ள விசைப் படகுகளுக்கு ஏஜெண்டுகள் மூலம் சப்ளை செய்வதற்காக கொண்டு வந்ததாக கூறினார். பின்னர் அவரையும் பயோ டீசல் லாரியுடன் உணவு தடுப்பு பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து

Sivasree marine fuel supplySep 8, 2025 - 11:38:13 AM | Posted IP 162.1*****

Ethu poiyyana pathivu.ethu marine diesel bill pakka erukku. Thoothukuty la manikandan enra bio diesel mafia win.fack news matrum vadhathi parapikiran.endha newskku pathil company sattapurwamaga nethimanrathai anugum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory