» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை முன் மாதிரி தாமிரபரணி: ஆட்சியர் இளம் பகவத் துவக்கி வைத்தார்!

திங்கள் 8, செப்டம்பர் 2025 8:49:58 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள் செடிகளை அகற்றி ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை முன் மாதிரியான தாமிரபரணியை உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் கிராம உதயம் சார்பில் தாமிரபரணி ஆற்றில் 1 இலட்சம் பனைவிதைகள் விதைப்பது. செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளி மாணவர்கள் சார்பில் விதைப்பந்துகள் விதைப்பது. ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் 1000 மரக்கன்று நடும் நிகழ்ச்சிகளை மாவட்டஆட்சித்தலைவர் இளம்பகவத் துவக்கி வைத்தார்.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி, கிராம உதயம்தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்ததாவது: ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக, இந்தப் பகுதியில் உள்ள கருவேல மரங்களை எல்லாம் அகற்றி விட்டு அதற்கு பதிலாக அந்த இடத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டு, கிராம உதயம் அமைப்பு மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறது. அதற்காக பல்வேறு முயற்சிகள் பலநபர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சீர்படுத்தும் இயந்திரம், இந்த இடத்தினை சமப்படுத்துவதற்கான பணிகள், தண்ணீர் பாய்ச்சுவதற்கான ஏற்பாடுகள், வணிகசங்கங்களின் பங்களிப்பு, தொண்டு நிறுவனம் மூலம் மரங்களை வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் இந்தநிகழ்வின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்காக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மரக்கன்றுகளை வைத்து வளர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நபர், அல்லது அமைப்பு மட்டும் உதவி செய்யாமல் அனைவரும் சேர்ந்து இந்த நிகழ்வினை செய்திருக்கிறார்கள். 

இதுபோன்ற முன்னெடுப்புகள் ஆற்றை பாதுகாக்க வேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், மரம் வளர்க்கவேண்டும் என்ற நல்ல செயல்களுக்கு வழிவகுக்கிறது. வெளியூரிலிருந்து வருகைதந்து ஒரு அமைப்பு சார்பாகவோ அல்லது ஒரு தனி நபரோ மரங்களை வளர்க்கும் பட்சத்தில் உள்ளூரிலிருக்கின்ற மக்களுக்கு அதன் அருமை புரியாமல் போய்விடும். எனவே, அதன் அருமை புரிந்து நாம் மரத்தை வைத்திருக்கின்றோம், மரத்தைவளர்ப்போம். 

நமது ஆறு மற்றும் நமது மரம், இதனை நாம் தான் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து நாம் பாதுகாப்போம். மேலும், ஆடு மாடுகள் மரத்தினை கடிக்காமல் அதற்கேற்றவாறு பாதுகாத்துதண்ணீர் ஊற்றி பாதுகா க்க வேண்டும். இந்த முன் முயற்சியில் மக்கள் அனைவரையும் ஈடுபடுத்தி குறிப்பாக மாணவர்களை இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு ஈடுபடுத்தியமைக்காக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

வடமாநிலங்களில் மழைபெய்துவெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. அதேப் போல் மேற்குதொடர்ச்சி மலையிலும் மழை பெய்து காவிரி ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. இயற்கையை எப்போதும் நாம் நம்பமுடியாது. அவ்வாறு மேற்கு தொடர்ச்சிமலை பகுதி மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் 2023 ல் ஏற்பட்ட வெள்ளத்தை காட்டிலும் அதிகமாகவரும். ஆகவே, ஆற்றுபடுகரையில் மரங்களை வைத்து பாதுகாத்து வளர்க்கும் போது வெள்ளத்தின் வேகம் குறைய வாய்ப்பு உள்ளது. அதேப்போல் இப்பகுதியில் 2023 ல் ஏற்பட்டபெருவெள்ளம் போல் ஏதேனும் ஏற்பட்டால் இப்பகுதிமக்கள் தங்களை பாதுகாத்துகொள்வதற்கும் தயாராக இருக்கவேண்டும் என மாவட்டஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் தாமிரபரணி ஆற்றில் முள்செடி அகற்ற உதவியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். எக்ஸ்னரோ நிறுவனத்தின் சார்பில் செந்தில்குமார், கபடி முருகன், ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் முத்துமாலை, சந்ரு, தங்கபழம் பொன்இசக்கி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சேர்மன் பொ. சாரதா பொன்இசக்கி , கை. சுப்பிரமணியன் , மேல ஆழவார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல் முருகன், கருங்குளம் சு.பன்னீர் செல்வம், ஆறாம் பண்ணை சேக் அப்துல் காதர், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சேர்மன் கந்தசிவசுப்பு, பொன்னன் குறிச்சி கு. துரை, தாமிரபரணி எழுத்தாளர் முத்தாலங்-குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளி முதல்வர் ஜெய்தூன்பீவி, ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் பள்ளி தலைமை ஆசிரியை ராணி ஆகியோர் இந்த பாராட்டு சான்றிதழை பெற்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கராஜ், ஆழ்வாரி திருநகரியின் பேரூராட்சியின் தலைவர் சாரதாபொன் இசக்கி, எழுத்தாளர், செயற்பாட்டாளர் முத்தாலகுறிச்சி காமராசு, கிராம உதயம் அமைப்பின் மேலாளர் வேல்முருகன், துணை சேர்மன் வழக்கறிஞர் பகத் சிங், ஆழ்வாரிதிருநகரியின் பேரூராட்சியின் துணைத்தலைவர் சுந்தர்ராசு, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி செயல் அலுவலர் காயத்திரி, ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் அண்டோ, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அமீன்கான், அஜீத், ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி மணிமொழிச்செல்வன், அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அரசு பேருந்தை வரவழைத்து, தாமிரபரணியில் நீர்கருவை மரங்களை பிடுங்கி, மரம் நடும் பணியை செய்து வரும் மாவட்ட ஆட்சியரை பாராட்டி சொந்தமாக பாட்டிடெழுதி பாடிய கே.ஜி.எஸ். துவக்கப்பள்ளி மாணவிகளில் செயலை அனைவரும் பாராட்டினார்கள்.


மக்கள் கருத்து

கந்தசாமிSep 8, 2025 - 07:13:20 PM | Posted IP 162.1*****

மரத்தை வைத்து பாதுகாப்பருக்கே மரம் சொந்தம் என்று அறிவிக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory