» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

திங்கள் 8, செப்டம்பர் 2025 8:14:04 AM (IST)



விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர்   கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனியசாமி திருக்கோவில் ஆவணி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இதில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்செந்தூர், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 குதிரை வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு 90 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.

அதேபோல் மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூஞ்சிட்டு போட்டியில் 48 ஜோடி மாடுகளும் தேன் சிட்டு போட்டியில் 15 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன,  பூசனூர் கிராமத்திலிருந்து விளாத்திகுளம் வரை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் குத்துவிளக்கு சுழல் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாபெரும் குதிரை வண்டி மற்றும்  மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, விளாத்திகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மற்றும் விழா கமிட்டியினர்  ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory