» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

திங்கள் 8, செப்டம்பர் 2025 8:05:00 AM (IST)



கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் சர்வதேச கழுகுகள் தின விழா கொண்டாடப்பட்டது.

அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலில் கழுகுகளின் பங்களிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், நாடு முழுவதும், செப்டம்பா் மாதம் முதல் சனிக்கிழமை சா்வதேச கழுகுகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, ஓவிய பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்கள் கழுகின் படத்திற்கு வண்ணம் தீட்டி, கழுகு இனங்களை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின்னா், மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். ஓவிய பயிற்சிப் பள்ளி நிா்வாகி முருகபூபதி, சுற்றுச்சூழல் ஆா்வலா் முத்துமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி சங்க செயலா் பழனிகுமாா் வரவேற்றாா். சங்க உறுப்பினா் பூல்பாண்டி நன்றி கூறினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory