» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து போராட்டம் : இந்து முன்னணி அறிவிப்பு

ஞாயிறு 7, செப்டம்பர் 2025 11:51:30 AM (IST)

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரேக்கிங் தரிசன கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி எண் 47ன் கீழ் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் அதிக பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் பண்டிகை நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் தினசரி ஒரு மணி நேரம் பிரேக்கிங் (இடைநிறுத்தம்) தரிசனத்தை அறிமுகம் செய்து அதற்காக நபருக்கு ரூபாய் 500 தரிசன கட்டணமாக வசூலிக்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில் அதிக பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இதனை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. பொதுவாகவே இந்து கோவில்களில் தரிசன கட்டணம் என்ற பெயரில் இந்து சமய அறநிலையத்துறையால் அடிக்கப்படும் கொள்ளையை எதிர்த்து தொடர்ந்து இந்து முன்னணி போராடி வருகிறது.

இந்நிலையில் சாதாரண தரிசன கட்டணம் என்ற நிலை மாறி பிரேக்கிங் (இடைநிறுத்தம்) தரிசன கட்டணம் என்ற பெயரில் புதிய உருவம் எடுத்துள்ளதும் அதற்காக நபர் ஒருவருக்கு ரூபாய் 500 வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பும் பக்தர்களை மிகுந்த அதிர்ச்சியடைய செய்துள்ளது. கோவில்களில் பக்தர்கள் அனைவரும் சமம் சுவாமி தரிசனத்தில் அனைத்து பக்தர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும், என்று இந்து சமய அறநிலையத்துறையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்து முன்னணி. தரிசன கட்டணம் என்ற பெயரில் அறநிலையத்துறை அடிக்கும் கொள்ளையை கண்டித்து போராடியும் வருகிறது. 

எனவே, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் புதிதாக அமல்படுத்தியுள்ள பிரேக்கிங் தரிசன கட்டணத்தை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையென்றால் இதனை கண்டித்து பக்தர்களை ஒன்று திரட்டி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory