» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நடத்தை விதிகள் மீறியதாக எஸ்.ஐ., பெண் போலீஸ் சஸ்பெண்ட்!
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:52:12 AM (IST)
கோவில்பட்டியில் நடத்தை விதிகள் மீறியதாக போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த செல்வகுமார் (36). மற்றும் பெண், காவலராக பணியாற்றி வந்த இந்திராகாந்தி (32) ஆகியோர் ஆக.17ல் நடுரோட்டில் சண்டையிட்டனர். இதனால், எஸ்.ஐ., செல்வகுமார் திருச்செந்துாருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இந்திரா காந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு, செல்வகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இந்திராகாந்தி புகார் அளித்தார்.இதையடுத்து, எஸ்.ஐ., செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹாசி மணி நேற்று உத்தரவிட்டார். இதேபோல, நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, பெண் காவலர் இந்திரா காந்தியையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)











SivaSriSep 7, 2025 - 02:17:09 PM | Posted IP 172.7*****