» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா கொடியேற்றம்
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:31:21 AM (IST)
தூத்துக்குடி மறைமாவட்டம், தாளமுத்துநகர் பங்குக்கு உட்பட்ட ஆரோக்கியபுரம் பாதுகாவலர் புனித ஆரோக்கிய நாதர் ஆலயத்தின் 105-வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி ஆரோக்கியதாஸ், அமலன் ஆகியோர் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் அமலன் மறையுரை நிகழ்த்தினார். தாளமுத்து நகர் பங்குத்தந்தை பிரான்சிஸ் வசந்த் திருப்பலியில் கலந்துகொண்டார். விழாவில் தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையுடன் தொடங்கி இரவு 7 மணிக்கு திருப்பலி நடைபெறும்.இரவு 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து நடைபெறும் மாலை ஆராதனைக்கு லூர்த்தம்மாள்புரம் பங்குத்தந்தை செல்வன், புதுக்கோட்டை பங்குத்தந்தை லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி நடத்துகின்றனர். வருகிற 14-ந் தேதி காலையில், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க இயக்குனர் பெஞ்சமின் டி.சுசா தலைமையில் நடைபெறும் திருவிழா திருப்பலியில், சிறுமலர் குறும்மட அதிபர் உபர்ட்டஸ் கலந்துகொள்கிறார். விழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பங்குத்தந்தை பிரான்சிஸ் வசந்தன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)










