» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி கேண்டீனில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்: ரூ.5 ஆயிரம் அபராதம்!
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:19:12 AM (IST)
கழுகுமலை பகுதியில் தனியார் பள்ளி கேண்டீனில் திடீர் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்ததோடு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கழுகுமலை வேதகோவில் தெரு பகுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தனிநபர் விதிமுறைகளை மீறி கேண்டீன் நடத்தி வருவதாகவும், அதில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்வதாகவும், வெளியில் உள்ள கடைகளில் உணவு பார்சல்கள் வாங்கிவந்து அதனை கூடுதல் விலைக்கு விற்று வருவதாகவும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார்கள் வந்தது.
இதன்பேரில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் அருண் உத்தரவின்பேரில் கயத்தாறு உணவு பாதுகாப்பு அலுவலர் ஹரிஞானசந்தியா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.
இதில் உணவு பாதுகாப்பு துறை அனுமதி இல்லாமலும், விதி முறைகளை மீறியும் கேன்டீன் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அங்குள்ள உணவு பொருட்களை ஆய்வு செய்ததில் சில பாக்கெட்டில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து கேண்டீன் நடத்திய நபருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அனுமதி வழங்காமல் கேன்டீன் நடத்த கூடாது என பள்ளி நிர்வாகத்துக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல் கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கும் சென்ற அதிகாரிகள் அங்குள்ள கேண்டீனை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேன்டீனிலும் தரமற்ற உணவு பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமுறைகளை மீறி கேண்டீன் நடத்துவது மற்றும் தரமற்ற உணவு பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு விற்றால் அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)










