» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுபோதையில் ரகளை செய்த வாலிபர் கைது
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:13:02 AM (IST)
சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டையில் மதுபோதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை சந்திப்பு பகுதியில் ஒருவர் மது போதையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு தரும் வகையில் ரகளை செய்வதாக நேற்று தட்டார் மடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தட்டார்மடம் உதவி ஆய்வாளர் பொண்ணு முனியசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக போதையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்து எச்சரித்துள்ளனர். தொடர்ந்து அவர், பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் செயல்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், பெரியதாழை மேற்கு தெரு வைச்சேர்ந்த வால்டர் மகன் செல்வம் (25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)










