» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செங்கோட்டையன் நீக்கம் எதிரொலி: அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
சனி 6, செப்டம்பர் 2025 8:50:14 PM (IST)

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதை வரவேற்று தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதிமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, அறிவிப்பு வெளியிட்டதனை வரவேற்கும் விதமாக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் டூவிபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் முன்பு அதிமுக தொண்டர்கள் கூடி பட்டாசு வெடித்தும் செங்கோட்டையனுக்கு எதிராக கோஷம் எழுப்பியும் கொண்டாட்டம்.
இந்நிகழ்வின் போது மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கேல் ஸ்டேணிஸ் பிரபு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)










