» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ: 6 பேர் கைது!
சனி 6, செப்டம்பர் 2025 4:24:05 PM (IST)
நாசரேத் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர் கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). மற்றும் இவரது நண்பர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், எஸ்.ஐ. சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சமூக அரிவாளுடன் இருப்பது போன்று வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர்களான நாசரேத் ஞானராஜ் நகரைச் சேர்ந்த முருகன் மகன் தங்கத்துரை (24), சாத்தான்குளம் அருகே சடையன்கிணறு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் இசக்கிமுத்து (19), அம்பலச்சேரியை சேர்ந்த முருகன் மகன் மாணிக்கராஜா(24), சின்னத்துரை மகன் மீனாட்சிசுந்தரம்(21), அம்பலச்சேரியை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் தளவாய்பாண்டியன்(26) ஆகிய 6 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் 6 பேரும் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)










