» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: பெண்கள் கோரிக்கை!
திங்கள் 30, ஜூன் 2025 3:12:33 PM (IST)

வல்லநாடு அருகே பாறைக்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் வட வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடை முன்பு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடையை துவங்கும் போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மதுக்கடை அருகே பஸ் ஸ்டாப் உள்ளது. மாணவ, மாணவிகள் அந்த வழியே செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த பகுதி மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)










