» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் : பொதுமக்கள் நாளை மனு அளிக்கலாம்
புதன் 4, ஜூன் 2025 8:50:20 AM (IST)
தூத்துக்குடி தாலுகாவில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தொடர்பாக நாளை (ஜூன் 4) மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்துக்கே வந்து செயலாற்றும் வகையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை அறிவித்து உள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர், மாவட்ட அலுவலர்களுடன் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்வார்.அதன்படி தூத்துக்குடி தாலுகாவில் வருகிற 18-ம் தேதி ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளார். இதனால் பொதுமக்களிடம் இருந்து வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பெற உள்ளனர்.
இந்த குழுவினர் தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் மற்றும் முடிவைத்தானேந்தல், கீழத்தட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றில் மனுக்கள் பெற உள்ளனர். எனவே பொதுமக்கள் அந்த இடங்களுக்கு சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை குழுவினரிடம் கொடுத்து பயனடையலாம் என்று தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன் தெரிவித்து உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)










