» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்கள் நலவாரியத்தில் பதிவு முகாம் : அமைச்சர் பி.கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்

செவ்வாய் 20, மே 2025 8:52:34 PM (IST)



தூத்துக்குடியில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தொடங்கிவைத்து, பார்வையிட்டார்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் இன்று (20.05.2025), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தின் சார்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் தொடங்கிவைத்து, பார்வையிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து தீர்வு காணும் வகையில் அரசு திட்டங்கள் மூலம், அவர்களுக்கு கல்வி. சுகாதாரம், வேலைவாய்ப்பு. சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக "தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்" அமைக்கப்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் என 838 பேர் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 40 பெண்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 8 பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கு ஏதுவாக மானியத்துடன் கூடிய வங்கிகளில் கடன் பெற்று வழங்கிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் உரிய ஆவணங்களுடன் (ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விதவைச்சான்றிதழ். போட்டோ, கைப்பேசி எண் விபரங்களுடன்) உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 19.05.2025 முதல் 03.06.2025 வரை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியில் வசிக்கும் கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோருக்கான சிறப்பு முகாம் இன்று அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

மேற்படி, நடைபெற்ற சிறப்பு முகாமில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் சுமார் 172 பேர் கலந்து கொண்டு திறன் பயிற்சி மற்றும் சுயதொழில் போன்ற திட்டங்களில் பயன்பெறும் பொருட்டு நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் 40 மகளிருக்கு சுயதொழில் தேவைக்கான திறன்பயிற்சியாக தையல் பயிற்சி (Embroidery and aari Work வழங்கப்பட்டது. அப்பயிற்சியனை நிறைவு செய்த மகளிர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 23 நபர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வேண்டி பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே விண்ணப்பித்த 46 நபர்களுக்கு புதிதாக மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா, கிழக்கு மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) ஏஞ்சல் விஜய நிர்மலா, தமிழ்நாடு கைம்பெண்கள் நல வாரிய உறுப்பினர்கள் சொர்ணலதா, சேவியரம்மாள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory