» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3வது சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணி நிறைவு

செவ்வாய் 6, மே 2025 9:01:16 PM (IST)



தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம் - 3-ல் பெரிய சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக ஆழப்படுத்தும் பணி 26 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கையாளும் திறனை  மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.  JSW  தூத்துக்குடி பல்நோக்கு முனையத்தின் மூலம் இயக்கப்படும் வடக்கு சரக்கு தளம் -3, தற்போது இடைக்கால வர்த்தக செயல்பாடுகளைத் துவங்குவதற்கு தயாராக உள்ளது. இந்த முனையத்தில் அமைந்துள்ள இரண்டு 120 டன் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலக்கரி, சுண்ணாம்புக் கல், ஜிப்சம், ராக் பாஸ்பேட் மற்றும் தாமிர தாது போன்ற பொது சரக்குகளைக் கையாள முடியும்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம் -3, 306 மீட்டர் நீளமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டுள்ளது. இச்சரக்குதளம் 260 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும் மற்றும் 95,000 னுறுவு கொள்ளளவு கொண்ட சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடக்கு சரக்கு தளம் 3-ஐ முழுமையாக இயந்திரமயமாக்குவதற்கான சலுகை ஒப்பந்தமானது வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கும்,. JSW  தூத்துக்குடி பல்நோக்கு முனையத்திற்கும்  இடையே கையெழுத்தானது. இச்சலுகை ஒப்பந்தத்தின்படி 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் இயந்திரமயமாக்கல் பணியானது முடிவடையும் தருவாயில் இத்தளத்தில் வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும்.

வடக்கு சரக்கு தளம் - 3-ல் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பனமேக்ஸ் வகை பெரிய சரக்கு கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3 ஆழப்படுத்தும் பணியானது 05.04.2025 அன்று துவக்கப்பட்டு 26 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் உள்துறைமுக பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையினை 488 மீட்டரிலிருந்து 550 மீட்டராக ஆழப்படுத்தும் பணி வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும்.  மேலும் பெரிய வகை சரக்கு கப்பல் மற்றும் சரக்குபெட்டக கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக கப்பல்கள் துறைமுகத்திற்குள் வரும் நுழைவு வாயிலினை 153 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் நிலக்கரி தளத்தில் 80,000 னுறுவு டன்கள் திறன் கொண்ட 230 மீட்டர் நீளமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட இத்தளத்தில், கப்பல் இல்லாத சமயத்தில் இணைப்பு கன்வேயர் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 1500 டன் மொத்த சரக்குகளை வெளியேற்றுவதற்கு வசதியாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கன்வேயர் மற்றும் துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கிடன் இணைக்கப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறுகையில், பொது சரக்குகளைக் கையாளுவதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வடக்கு சரக்கு தளம்-3ல், பொது சரக்குகளைக் கையாளும் திறனை மேம்படுத்தவும், விரைவில் இயந்திர மயமாக்கப்படவிருக்கும் இத்தளத்தின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். 

மேலும் அவர் மொத்த சரக்குகளைக் கையாளும் திறனை மேம்படுத்தி கடல்சார் வர்த்தகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த சிறப்பான வசதியைப் பயன்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களையும் மற்றும் வர்த்தக கூட்டாளர்களையும் கேட்டுக் கொண்டார். இவ்வாறு வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory