» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுதானிய வியாபாரியிடம் ரூ.2 லட்சம் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 20, பிப்ரவரி 2025 8:24:19 AM (IST)
விளாத்திகுளத்தில் சிறுதானிய வியாபாரியிடமிருந்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன்(70). இவர் சிறுதானியம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று நண்பகலில் தனியார் வங்கிக்கு சென்று ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு, அதை ஒரு பையில் வைத்து, தனது மொபெட்டின் முன் பகுதியில் வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு சென்றபோது, அவரை வழிமறித்த 3 பேர் அவரது சட்டையில் சேறு இருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் தனது மொபெட்டை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள கடைக்கு சென்று, தண்ணீர் பாட்டில் வாங்கி, தனது சட்டையை சுத்தம் செய்துள்ளார்.பின்னர் மொபெட்டுக்கு வந்தபோது, அதில் வைத்திருந்த பணப் பையை காணவில்லையாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










