» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியால் குத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை
வியாழன் 20, பிப்ரவரி 2025 8:16:24 AM (IST)
திருச்செந்தூரில் யாசகம் பெறுபவரை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சுரேஷ் (37). இவர் திருச்செந்தூர் பைரவர் கோயிலில் சமையல் தொழிலாளியாக இருந்துள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் வெங்கடேஷ். இவர் பைரவர் கோயில் முன்பு யாசகம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், சுரேஷ், வெங்கடேஷை கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருச்செந்தூர்சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த சார்பு நீதிபதி செல்வபாண்டி, சுரேஷ§க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1,000ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










