» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடலில் மூழ்கி மாயமான சங்குகுளி மீனவரின் உடல் மீட்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 8:57:12 PM (IST)
தூத்துக்குடியில் சங்குகுளிக்க கடலுக்கு சென்றபோது மாயமான வாலிபர் இன்று வீரபாண்டிபட்டினம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி குரூஸ்புரத்தை சோ்ந்த டேனியல் மகன் சாம்சன்(20). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ், கில்டன் ஆகியோருடன் 17ம் தேதி காலையில் நாட்டுப்படகில் சங்கு குளிப்பதற்காக சென்றாராம். கரையில் இருந்து சுமாா் 10 கடல்மைல் தொலைவில் சங்கு குளித்துக் கொண்டிருந்த போது, சுரேஷ், கில்டன் ஆகியோா் கடலுக்குள் சென்று சங்கு எடுத்துக் கொண்டு வெளியில் வந்தபோது, படகில் இருந்த சாம்சனை காணவில்லையாம். இதனால், சாம்சன் கடலில் தவறி விழுந்திருக்கலாம் என தெரிகிறது. இதனால் அவா்கள் அந்தப் பகுதியில் தேடிப் பாா்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவா்களும் அந்தப் பகுதியில் தொடா்ந்து மீனவா் சாம்சனை தேடி வருகின்றனா். இதுகுறித்த தகவலின் பேரில், தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இன்று மாலை திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய கட்டணம் கடற்கரையில் வாலிபர் சடலம் கரை ஒதுங்கி கிடப்பதாக திருச்செந்தூர் மரைன் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அது, 17ஆம் தேதி தூத்துக்குடியில் காணாமல் போன சங்கு குளித்தொழியாளி சாம்சன் என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பிணத்தைப் பார்த்து இறந்தது சாம்சன்தான் என்று உறுதி செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










