» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஐடி நிறுவன ஊழியர் வீட்டை உடைத்து நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 19, பிப்ரவரி 2025 8:47:08 PM (IST)
சாத்தான்குளம் அருகே ஐடி நிறுவன ஊழியர் வீட்டை உடைத்து நகை மற்றும் எல்இடிடிவி, ஹாேம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சுண்டங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோயில்ராஜ் மனைவி நவஷீலா (61). இவர்களது மகன்கள் ஜெப்ரின் (31), காட்வின் (29) ஆகிய இருவரும் திருமணமான நிலையில் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்து ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின் றனர். இதனால் நவஷீலா, சென்னையில் மகன்களுடன் சிலகாலம் தங்கியிருந்து பின்னர் சொந்த ஊருக்கு வருவது வழக்கம்.
இதுபோல் கடந்த வாரம், மகன்களை பார்ப்பதற்காக நவஷீலா, வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்று விட்டார். பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்மணி, நவஷீலா வீட்டில் மாலை நேரத்தில் மின்விளக்கு போட்டு பின்னர் காலையில் விளக்கை அணைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நவஷீலாவின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்துள்ளது. இதுகுறித்து உறவினர்கள் சென்னையில் உள்ள நவஷீலாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினார்.
அப்போது வீட்டில் வைத்திருந்த அரை பவுன் நங்க நாணயம், எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டர் ஆகியவற்றை மர்மநபர்கள் வீட்டு கதவை உடைத்து திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தூத்துக்குடியில் இருந்து போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










