» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிள்ளிகுளம் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
புதன் 19, பிப்ரவரி 2025 8:06:10 PM (IST)

கிள்ளிகுளம் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேரில் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இன்று (19.02.2025), கிள்ளிகுளம் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: கிள்ளிகுளம் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் உளுந்து, பாசிபயறு மற்றும் நெல் விதைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 5 டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இங்கு சுத்திகரிப்பு செய்யப்படும் விதைகள் கருங்குளம், திருவைகுண்டம்,திருச்செந்தூர், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம். மற்றும் கயத்தாறு போன்ற வட்டாரங்களை சேர்ந்த விதைகள் ஆகும். சான்றியளிப்பு துறையில் பதிவுசெய்து விதைப்பண்ணை அமைத்து அத்துறையினால் ஆய்வுசெய்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட வயல்மட்ட விதைகள் இவ்விதைகளாகும்.
விதைகளை இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைத்து சுத்தம் செய்து விதைசான்றளிப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகத்திற்கு பகுப்பாய்விற்க்கு அனுப்பி அந்த பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்றவிதைகளை அத்துறையால் வழங்கப்படும் சான்றட்டை தைத்து அந்தந்த வட்டாரத்திற்குரிய விதைகளை அந்த வட்டாரத்திற்குரிய வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு சரியான நேரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனாரால் திட்டம் வாரியாக இலக்கு பிரித்து வழங்கப்பட்டு வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர். மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களால் உண்மையான விவசாயியை கண்டறிந்து பரிந்துரை செய்து வேளாண்மை விரிவாக்கம் மையம் மூலமாக பட்டியல்யிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந் நிகழ்வுகள் அனைத்து வட்டாரங்களிலும் சரியாக நடைமுறைப்படுத்தபடுகிறதா என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்களால் கண்காணிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










