» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது : டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

புதன் 19, பிப்ரவரி 2025 5:54:52 PM (IST)

தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இடஒதுக்கீடு மற்றும் மாஞ்சோலை மலையக மக்கள் மீட்புரிமை குறித்த கருத்தரங்கு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது "தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு எந்த விதத்திலும் சிதைக்க கூடாது. இதற்காக தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாஞ்சோலை தோட்டத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் எதையோ குறி வைத்து உள்நோக்கத்தோடு சிலர் இடையூறு செய்கிறார்கள். மாஞ்சோலை மக்களின் குறைகளை கேட்காமல் தமிழகம் முதல்வர் அவமானப்படுத்தியதில் என்ன நியாயம் உள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் எந்த விதத்திலும் சரியானது கிடையாது. அதற்கான வினையை விரைவில் அனுபவிப்பார்கள். மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இருவர் கூறுவதும் மூடு மந்திரம் ஆக உள்ளது. 

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒரு மாநில அரசுக்கு உள்ளது. இருக்கிற அதிகாரத்தையே பயன்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. தமிழகத்தில் இதுவரை கேள்விபடாத அளவு கற்பழிப்பு சம்பவங்கள் பள்ளி குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. தமிழகமே கேள்விப்படாதது ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்படுத்த வேண்டுமோ அவர்கள் கையில் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை அவரவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

ஒரு அரசு மக்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதோ இல்லையோ ஆட்சியாளர்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உருவாகிவிட்டது. தமிழகம் முழுவதும் எப்பொழுது மூலை முடுக்கெல்லாம் கல்குவாரிகள் பிரச்சினை ஆகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு மாசு விளைவிக்க கூடிய வகையில் கல் குவாரிகள் உருவாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலந்தா உழக்குடி, மற்றும் விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்குவாரிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் அச்சுறுத்தலை உருவாக்கிக் கொண்டுள்ளது. 

தமிழகத்தில் இல்லாத பிரச்சனைகள் உருவாகி இருக்கிற பிரச்சனைகள் தீர்வு இல்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சமநிலை அற்ற நிலை நிலவுகிறது. 2021 இல் என்ன வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார்களோ அத்தனை வாக்குறுதிகளும் வேஸ்ட் ஆகி உள்ளது. தமிழக மக்கள் இந்த ஆட்சி மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அடுத்த ஓராண்டு எப்படி போகுமோ என்ற நிலை தான் உள்ளது என வேதனை தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory