» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைய வேண்டும்: ஆட்சியர்

புதன் 19, பிப்ரவரி 2025 5:32:11 PM (IST)



அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைய வேண்டும் என அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இன்று (19.02.2025) ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கள ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு காரசேரி ஊராட்சியில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் ஒழுங்குமுறை கூடத்தினையும், கீழச்செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், அங்குள்ள நலவாழ்வு மையத்தினையும், செக்காரக்குடி ஊராட்சி, சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாய தோட்டத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பொறுத்தப்பட்டு இயங்குவதையும், ஆலந்தா கண்மாய் மற்றும் அணைக்கட்டினையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டார்.

தொடர்ந்து, பூவாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொது சேவை மையம் மற்றும் வேளாண் மருந்தகத்தினையும், பூவாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கீழப்பூவாணி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், உழக்குடி கிராமத்தில் உள்ள உழக்குடி குளத்தினை நிரந்தரமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், வல்லநாடு ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடையின் கட்டுமானப் பணிகளையும், வல்லநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் கணினி அறை கட்டடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், மணக்கரை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தினையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டார்.

மேலும், ஸ்ரீவைகுண்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்கள். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.1,44,250 மதிப்பீட்டில் இறப்பு நிவாரணம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவற்றினை வழங்கிய பிறகு, 26 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களை வழங்கினார். 

அதனைத்தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் முற்பகலில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து மற்றும் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் உள்ளவை தொடர்கபாக ஆய்வு மேற்கொண்டார். 

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் த. ரத்னா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory