» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க சபதம் ஏற்போம் : முன்னாள் அமைச்சர் பேச்சு

புதன் 19, பிப்ரவரி 2025 3:38:11 PM (IST)



எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க சபதம் ஏற்போம் என தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பேசினார். 

தூத்துக்குடியில் அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் டூவிபுரத்திலுள்ள மாநில வர்த்தக அணி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பேசுகையில் "அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் காலம் தொட்டு ஜெயலலிதா காலம் இருந்த வரை இன்று மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற தலைவர்களாக இருந்து வருகிறாா்கள். 

அதன் பின்னர் 3ம் தலைமுறை பொதுச்செயலாளராக எடப்பாடி 4 ஆண்டுகாலம் நல்லாட்சி செய்தாா். என்பது நாட்டிற்கே தொியும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருக்கின்றனா். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளோடு மக்கள் பணியாற்ற வேண்டும். 2026 தோ்தல் எல்லோருக்கும் முக்கியமான காலக்கட்டமாகும் அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க அனைவரும் சபதம் ஏற்று களப்பணியாற்ற வேண்டும். உண்மையாக உழைக்கின்ற அனைவருக்கும் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று பேசினாா்.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமாா், முன்னாள் நுகா்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், புல்டன் ஜெசின், மாவட்ட பிரதிநிதி ேஜடியம்மா, வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், ராஜா, அந்தோனி ராஜ், முன்னாள் வட்ட செயலாளர் மோகன், வட்ட பிரதிநிதிகள் பெலிக்ஸ், ராஜ்குமார், மகாராஜன், பிபிலாம்மாள், ஜிபிலியா, மற்றும் சங்கர், மணிகண்டன், ஜேசராஜ், வெங்கடாசலம், ராஜசேகர், ஜோதிகா மாரி, ரெக்ஸி, உள்பட கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Thangamaharaja RFeb 21, 2025 - 01:17:54 PM | Posted IP 162.1*****

Sirippu thaangala

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory