» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் நக்சா திட்டம் துவக்க விழா!

புதன் 19, பிப்ரவரி 2025 10:29:30 AM (IST)



கோவில்பட்டி நகராட்சியை மத்திய அரசின் நக்சா திட்டத்தின்கீழ் நில ஆவணங்களை நவீனமாக்கும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

நாடு முழுவதும் நில ஆவணங்களை நவீனமாக்கும் திட்டம், ‘நக்சா’, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரத்தை டீரோன்கள் மூலம் போட்டோ எடுத்து, அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட புலங்களின் வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைகளின் பணியாளர்கள் அடங்கிய குழுக்களால் நவீன நில அளவு கருவிகளான ஓ.ஓ.பி.எஸ்., மற்றும் இ.டி.எஸ் கொண்டு நில அளவு செய்யப்படுகிறது. 

பின்னர், புல வரைப்படம் தயார் செய்யப்படுகிறது. இந்தப் படத்தில் ஆட்சேபணைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். அதன்பின் இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நில ஆவணங்கள் வெளியிடப்படுகிறது. இறுதியாக, புவி அமைவிட புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள் உரிமைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இந்த திட்டத்தில், தமிழகத்தில் கோவில்பட்டி உட்பட 10 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி இத்திட்டம் துவக்கவிழா நேற்று நடந்தது. நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார். துாத்துக்குடி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் சீனிவாசகன் வரவேற்றார். திட்டத்தை துாத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். கோவில்பட்டி நகரமைப்பு அலுவலர் சேதுராஜன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory