» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் ஸ்டாலினை அப்பா என்று சொல்லமாட்டார்கள்: கடம்பூர் செ.ராஜூ பேச்சு!
புதன் 19, பிப்ரவரி 2025 10:22:35 AM (IST)

"தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை" என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் "அண்ணாவை பேரறிஞர் அண்ணா என்று, தந்தை பெரியாரை ஐயா என்று மக்கள் உணர்வுபூர்வமாக அழைத்தனர்.
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழகத்தை கட்டி போட்ட வரலாறு உண்டு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று எல்லோரும் அன்புடன் அழைத்தனர். அது இயற்கையாகவே அமைந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் அவருடைய தந்தையை வேண்டுமென்றால் அப்பா என்று சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் முக ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை. திமுக எப்போதும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை. அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. அதிமுகவில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)











tutyianFeb 19, 2025 - 11:14:57 AM | Posted IP 162.1*****