» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பசு மாடுகள், கன்றுக்குட்டிகளை மினிவேனில் கடத்தி விற்பனை : ஒருவர் கைது!
புதன் 19, பிப்ரவரி 2025 8:20:29 AM (IST)
காயல்பட்டினத்தில் மேய்ச்சலுக்கு சென்ற 3 பசுமாடுகள், கன்றுக் குட்டிகளை மினிவேனில் கடத்தி விற்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கோமான் புதூரை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ராஜதுரை. இவர் பசுமாடுகள், ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் இவர் பால் விற்பனையும் ெசய்து வருகிறார். இவரிடம் 2 பால் கறக்கும் மாடுகள், ஒரு சினை மாடு, 3 கன்றுக்குட்டிகள் மற்றும் ஆடுகள் இருந்தன. இவைகளை தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதிகளில் உள்ள பொட்டல் காடுகளில் மேய்ச்சலுக்கு விட்டு, மாலையில் அவற்றை பிடித்து வந்து தொழுவத்தில் கட்டுவது வழக்கம்
இந்நிலையில் கடந்த 12-ந்தேதி வழக்கம் போல் காலையில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மாலையில் 3 பசுமாடுகளையும், 3 கன்றுக் குட்டிகளையும் காணவில்லை. அவர் பல இடங்களில் தேடியும் அவை கிடைக்கவில்ைல. இதுகுறித்து ராஜதுரை அளித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், காயல்பட்டினம் வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த லிங்கம் மகன் கந்தசாமி (55) என்பவரும், பாஸ்கர் கணபதி மகன் முத்துக்குமாரும் மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் மினிவேனில் கடத்தி சென்று விற்றது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த கந்தசாமியை நேற்று ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 3 மாடுகள், 3 கன்றுக்குட்டிகளை முத்துக்குமாருடன் சேர்ந்து மினிவேனில் நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று விற்றதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியான முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










