» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)
2025 - 2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த பெருமக்கள் நல இயக்கம் நிறுவனர் & முதன்மை தன்னார்வலர் ஆ.சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் மூத்த பெருமக்கள் 11.2 சதவீதம் உள்ளனர். இது 2030 ம் ஆண்டில் 1.5 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூத்த பெருமக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
முதியோர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் முதலீடுகள் தேவைப்படுகின்றது. ஆகவே மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை 2023 ல் வரையறை செய்துள்ள மூத்த பெருமக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளான உடல்நலம், வருமானம், உறைவிடம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு 2025-2026 வரவு செலவு அறிக்கையில் மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 59, நாள் : 04.09.2023 ன் படி செயல் திட்டங்கள் வகுத்து முதியோருக்கான மாநில கொள்கையை மிக விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)











Nanjil N Selvam,kadayal.kanyakumari Dist.Feb 19, 2025 - 02:17:08 PM | Posted IP 172.7*****