» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகாசிவராத்திரியை முன்னிட்டு அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 11:25:59 AM (IST)
மகாசிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு) சி.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உத்திரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நதி நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த கங்கை நீர் பாட்டில்களின் சிறப்பு விற்பனை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதத்தில் வருகின்ற மகாசிவராத்திரியை முன்னிட்டு பொதுமக்கள் இப்புனித நீரை எளிதில் பெறும் வகையில் கங்கை நதி நீர் சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
250மி.லி அளவு கொண்ட ஒரு பாட்டில் கங்கை நதி நீர் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனைப்புகுதல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










