» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கதிரடிக்கும் எந்திரம் மோதி விவசாயி பரிதாப சாவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:28:39 AM (IST)
எட்டயபுரம் அருகே, தனது நிலத்தில் மக்காச்சோள அறுவடையை பார்த்து கொண்டிருந்த விவசாயி, எதிர்பாரதவிதமாக கதிரடிக்கும் எந்திரம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே கசவன்குன்று வடக்கு தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கருப்பசாமி (48). விவசாயி. இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் விளைச்சலாகி அறுவடைக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், அவர் கள்ளக்குறிச்சியில் இருந்து கதிர் அடிக்கும் எந்திரத்தை வாடகைக்கு வரவழைத்து, அறுவடை பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த எந்திரத்தை கள்ளக்குறிச்சி புதுவீடுத் தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் அழகுவேல் (30) என்பவர் இயக்கி வந்தார்.
நேற்று மாலை 3 மணிக்கு கருப்பசாமி நிலத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணி நடந்தது. இந்த பணிகளை கருப்பசாமி மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது அழகுவேல் எந்திரத்தை பின்நோக்கி இயக்கி உள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக அங்கு நின்ற கருப்பசாமி மீது எந்திரம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கதிர் அடிக்கும் எந்திர டிரைவர் அழகுவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கருப்பசாமிக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், மதன் என்ற கருத்தப்பாண்டி என்கிற மகனும், ராமகமலம் என்கிற மகளும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










