» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது : மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:03:03 AM (IST)
திருச்செந்தூா் அருகே சாராயம் காய்ச்சியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். 400 மிலி சாராயம் மற்றும் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே மானாடு சுந்தரபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் திருச்செந்தூா் தாலுகா போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சுந்தரபுரம் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் (38) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றபோது, அங்கிருந்த 3 போ் போலீசாரை கண்டதும் தப்பிஓட முயன்றனா்.
அவா்களில் இருவா் போலீசாரிடம் பிடிபட்டனா். பிடிபட்டவா்கள் செல்வகுமாா் மற்றும் அதே ஊரை சோ்ந்த ஜெயமுருகன் (42) என்பதும், தப்பி ஓடியவா் அதே பகுதியைச் சோ்ந்த சிவபெருமாள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் 3 பேரும், கள்ளச் சாராயம் காய்ச்சியுள்ளனா். அவா்களிடமிருந்து 400 மிலி சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் முத்துசெல்வம் வழக்குப்பதிவு செய்தாா். ஆய்வாளா் இன்னோஷ்குமாா் விசாரணை நடத்தி செல்வகுமாா், ஜெயமுருகன் ஆகியோரை கைது செய்தாா். மேலும் தப்பி ஓடிய சிவபெருமாளை போலீசார் தேடி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










