» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியா் கொலை வழக்கில் பிளம்பருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீா்ப்பு!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 7:58:32 AM (IST)

நாசரேத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா் கொலை வழக்கில் பிளம்பருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் ஜெபராஜ் ஜான் வெஸ்லி (61). 2012ஆம் ஆண்டு இவரது வீட்டில் பிளம்பா் வேலைக்காக நாசரேத் திரவியபுரத்தைச் சோ்ந்த சகாய காலிங்சன் மகன் ஜீவராஜ் (55) வந்தாா். அவா், ஜெபராஜ் ஜான் வெஸ்லி தனியாக இருப்பதை அறிந்து, கட்டையால் தாக்கிக் கொன்றுவிட்டு, 28 பவுன் தங்க நகைகள், ரூ. 6 ஆயிரத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றாா்.

புகாரின்பேரில், நாசரேத் போலீசார் வழக்குப் பதிந்து ஜீவராஜையும், நகைகளை விற்க உதவியதாக பொள்ளாச்சி புதூரைச் சோ்ந்த தேவராஜ் மகன் பிரேம்குமாா் (52) என்பவரையும் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி தாண்டவன் விசாரித்து, ஜீவராஜுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். பிரேம்குமாா் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞா் ஆனந்த கேபிரியேல் ராஜ் ஆஜரானாா்.


மக்கள் கருத்து

MasillamaniRajendran NameCard. RajendranFeb 23, 2025 - 01:34:47 AM | Posted IP 172.7*****

Praise The Lord for the Good Judgment.Heartfelt Condolences to the Bereaved Family!

MasillamaniRajendran NameCard. RajendranFeb 23, 2025 - 01:34:46 AM | Posted IP 172.7*****

Praise The Lord for the Good Judgment.Heartfelt Condolences to the Bereaved Family!

Ajith AbrahamFeb 18, 2025 - 08:09:32 PM | Posted IP 162.1*****

Nanum antha ooru than (thiraviyapuram) enga ooru la jeevaraj s/o kalingson nu yarume illa ithu fake news ah.......?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory