» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சர்வதேச தேக்வாண்டோ நடுவர் விருது பெற்ற பெண் காவலருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
திங்கள் 17, பிப்ரவரி 2025 7:43:00 PM (IST)

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சர்வதேச தேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் பெண் சர்வதேச தேக்வாண்டோ நடுவர் விருது பெற்ற தூத்துக்குடி மாவட்ட பெண் காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வரும் தேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனையான செல்வி. கிருஷ்ணவேணி என்பவர் கடந்த ஜனவரி 17 முதல் 26 வரை ஆகிய தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற 133வது சர்வதேச தேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தேக்வாண்டோ விளையாட்டில் தமிழ்நாட்டின் முதல் பெண் சர்வதேச நடுவராக தேர்ச்சி பெற்று தமிழ்நாடு தேக்வாண்டோ அசோசியேசன் சார்பாக விருது பெற்றுள்ளார்.
மேலும் நேற்று (16.02.2025) தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதான விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு சீனியர் பெண்கள் 46 முதல் 49 எடை பிரிவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
மேற்படி தூத்துக்குடியில் நடைபெற்ற தேக்வாண்டோ விளையாட்டில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் மற்றும் சர்வதேச தேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் முதல் பெண் சர்வதேச நடுவர் விருது பெற்ற மேற்படி பெண் காவலர் கிருஷ்ணவேணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (17.02.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










